இன்று (23-09-2025) சைகை மொழிகளுக்கான சர்வதேச நாளை முன்னிட்டு, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பிரெய்லி பிரிவில் “Hands Speak, Hearts Connect” என்ற தலைப்பில் சிறப்புரையாடல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருமதி ஜெயந்தி நாராயணன் (முதல்வர், தி கிளார்க் சிறப்புப் பள்ளி, சென்னை) அவர்கள் சிறப்புரையாற்றினார். 30-க்கும் மேற்பட்ட வாசகர்கள் மற்றும் பார்வை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இந்திய சைகை மொழி மற்றும் அமெரிக்க சைகை மொழி குறித்து விரிவாக விளக்கி, வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எளிதில் புரியும் வகையில் பதிலளித்தார். அனைவருக்கும் பயனளித்த அருமையான நிகழ்வாக அமைந்தது.
