மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு உதவித்தொகை திட்டங்களை அறிவித்துள்ளது. தற்போது, மாற்றுத்திறனாளிகளுக்கான வாசிப்பாளர் உதவித்தொகை மற்றும் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வாசிப்பாளர் உதவித்தொகை குறித்த விவரங்கள்:
யார் விண்ணப்பிக்கலாம்?
- 9-12 ஆம் வகுப்பு மாணவர்கள்: ₹3,000
- இளங்கலை மாணவர்கள்: ₹5,000
- முதுகலை/தொழில்நுட்பப் படிப்பு மாணவர்கள்: ₹6,000
தகுதிகள்:
- அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகள்/கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள்.
- முந்தைய ஆண்டு தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
- பிற கல்வி உதவித்தொகை பெற்றிருக்கக் கூடாது.
விண்ணப்பிக்கும் முறை:
- மாணவர்கள் மதிப்பெண் சான்றுடன் https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- பின்னர், விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 20.07.2025.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை குறித்த விவரங்கள்:
இந்த உதவித்தொகைக்கு மாற்றுத்திறனாளியான எந்தவொரு மாணவரும் விண்ணப்பிக்கலாம்.
கல்வி உதவித்தொகை விவரம்:
- 1-5 வகுப்பு: ₹2,000/-
- 6-8 வகுப்பு: ₹6,000/-
- 9-12 வகுப்பு: ₹8,000/-
- இளங்கலை: ₹12,000/-
- முதுகலை/மருத்துவம்/பொறியியல்: ₹14,000/-
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதிகள் குறித்து மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகவும் அல்லது மேலேயுள்ள இணையதள முகவரியை பார்க்கவும்.
இந்த அறிய வாய்ப்பை மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இந்த தகவலைப் பகிர்ந்து கொள்ளவும்!
1:13 AM
Tags :
Government Scheme
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments