தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நடத்தும் "Tech4All 2025" என்ற முன்னணி தொழில்நுட்ப உதவி சாதனங்கள் அறிமுகக் கண்காட்சி ஜூன் 12 மற்றும் 13, 2025 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. இதில், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக கற்றலில் உதவும் பல்வேறு நவீன சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
நமது முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பிரெய்லி பிரிவின் நூலகர்கள் இந்த கண்காட்சியில் ஆர்வமுடன் கலந்து கொண்டோம். கண்காட்சியில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு கற்றல் உபகரணங்களை நேரில் பார்வையிட்டு, அவற்றின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து விரிவாக அறிந்தோம்.
இந்த அனுபவம், நமது நூலக சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்கும், பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறந்த கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்கும் உறுதுணையாக இருக்கும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
5:12 AM
Tags :
Activities
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments