பூந்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் பார்வையற்ற மாணவர் ஒருவர் முதன்முறையாக கணினியில் 12-வது பொதுத் தேர்வு எழுத உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 2021-ல் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில் பள்ளிக் கல்வித் துறை இந்த அனுமதியை வழங்கியுள்ளது. மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாவட்டக் கல்வி அதிகாரிகளுடன் நடத்திய கூட்டத்தில் இதை அறிவித்தார்.
விக்டோரியா மெமோரியல் பார்வையற்றோர் பள்ளியில் (பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளி) 6-வது வகுப்பு முதல் படித்து வரும் மு. ஆனந்த் (முழுமையாக பார்வையற்றவர்) கலைப் பிரிவில் படித்து வருகிறார். இவர் சீர்காழியைச் சேர்ந்தவர். மார்ச் 3-ல் தொடங்கும் தேர்வுகளில் இவர் கணினியில் பதிலளிக்க உள்ளார். பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியின் முதல்வர் அருள் ஆனந்தன் கூறியதாவது, "தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தின் கீழ் முதன்முறையாக ஒரு மாணவர் கணினியில் தேர்வு எழுதுகிறார். இது மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு ஒரு மைல்கல்லாகும்." ஆனந்த் 'நான்-விஷுவல் டெஸ்க்டாப் அக்சஸ்' (திரை வாசிப்பி - NVDA) எனும் மென்பொருளைப் பயன்படுத்தி லேப்டாப் அல்லது கணினியில் தேர்வு எழுதுவார். மேலும், அவருக்கு உதவியாக கணினி அறிவு கொண்ட எழுத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Courtesy:1. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2025/Feb/14/visually-impaired-student-in-tamil-nadu-to-take-class-12-board-exam-on-computer-for-first-time
2. https://www.dtnext.in/news/tamilnadu/in-a-first-in-tn-blind-student-gets-nod-to-write-class-12-board-exam-using-computer-822938
4:32 AM
Tags :
News Paper Clipping
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments