பார்வை மாற்றுத்திறனாளிகள் பிரிவிற்கு 06.10.2024 அன்று வாசகர்கள் திரளாக வருகைபுரிந்தனர். மேலும் அவர்கள் பிரைய்லி எழுத்துக்களை எப்படி எழுதுவது? அவர்கள் எப்படி படிப்பார்கள்? மற்றும் நீங்கள் அவர்களுக்கு எந்த வகையில் உதவி செய்கிறீர்கள்? என்று பல கேள்விகள் கேட்டு தெரிந்து கொண்டார்கள். வாசகர்கள், பிரெய்லி எழுதுகோல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, எந்தெந்த புள்ளிகளை எப்படி அமைக்க வேண்டும் என்பது போன்ற அடிப்படை விஷயங்களை கற்றுக்கொண்டனர். பிரெய்லி புள்ளிகளை விரல்களால் தொட்டு உணர்ந்து எழுத்துக்களை அடையாளம் காணும் முறை பற்றி விரிவாக விளக்கப்பட்டது. இதன் மூலம், பார்வைத் திறன் குறைபாடுடையவர்கள் எவ்வாறு சுதந்திரமாக படிக்கிறார்கள் என்பதை நேரடியாக அறிந்துகொண்டனர். எங்கள் பிரிவின் சேவையைப் பாராட்டி அவர்கள் சென்றது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு. இந்த பாராட்டு எங்களுக்கு புதிய உத்வேகம் அளித்துள்ளது. எதிர்காலத்தில் இன்னும் பல பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் எங்கள் சேவைகளை மேம்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளோம். நன்றி...
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments